வாக்குச் சாவடியைத் தாக்கும் நோக்கில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் தயாரான லொறி சிக்கியது.
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கைகுண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் லொறி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொரியின் உரிமையாளர் மற்றும் குடியிருப்பாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த லொறியில் வாக்குச்சாவடி மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாரான நிலையில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.