அமெரிக்கா விதித்திருந்த அருகம்பே சம்பந்தமான இலங்கைக்கான தடை நீக்கப்பட்டது.
அறுகம்பே பகுதியை அடிப்படையாக வைத்து , அமெரிக்கத் தூதரகம் விதித்திருந்த இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகள் கடந்த ஒக்டோபர் மாதம் (23) நீக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
அந்த பகுதியில் இஸ்ரேலிய பிரஜைகள் தாக்கப்பட உள்ளதாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், உரிய பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்போது அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் கடந்த ஒக்டோபர் மாதம் (23) அமெரிக்கத் தூதரகத்தின் எச்சரிக்கையை மேற்கோள் காட்டி இலங்கைக்கு வரும்போது மிகவும் அவதானமாக இருக்குமாறு தமது பிரஜைகளை எச்சரித்திருந்தன.