எல்லோருக்கும் ஹலால் உணவு கிடையாது; ஏர் இந்தியா முடிவு

ஹலால் உணவுகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படாது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

ஹலால் முறையை இந்துக்கள் மீது திணிக்க கூடாது என்று பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, பாஜகவினர் பலர் இந்த ஹலால் முத்திரைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா சார்பாக வழங்கப்படும் உணவுகளில் ஹலால் உணவுகள் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹலால் உணவுகளை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே அந்த உணவு வழங்கப்படும். மற்ற எல்லோருக்கும் வழங்கப்படாது.

இஸ்லாமியர்களுக்கு இத்தனை நாட்கள் முஸ்லீம் மீல்ஸ் என்று வழங்கப்பட்டது. இதற்கு பதிலாக இனி ஸ்பெஷல் மீல் வழங்கப்படும். அதில் ஹலால் முத்திரை இருக்கும். ஹலால் உணவுகள் அதை புக் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு முன்னதாக லேக்ட்டோஸ் இல்லாத உணவு, அசைவ உணவு, கோஷர் உணவு, இந்து உணவு ஆகிய உணவுகளில் அசைவம் இருந்தால் அதில் ஹலால் முத்திரை இருக்கும். இனி அப்படி எல்லா உணவுகளிலும் ஹலால் முத்திரை இருக்காது.

விருப்பமில்லாதவர்கள் மீது குறிப்பிட்ட உணவுப் பழக்கங்களைத் திணிக்காமல், மதப் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து ஏர் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.