பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை!

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை நடத்துகிறது.

இந்தியாவில் தற்போது ஆண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தை திருமணமாக கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான திருமண வயதை 21 ஆக நிர்ணயிக்க குழந்தை திருமண தடுப்பு சட்ட மசோதா உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2021 ல் கொண்டு வரப்பட்ட மசோதா காலாவதியான நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசித்து வருகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதந்தி தின உரையின்போது பிரதமர் மோடி, ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து பெண்களை பாதுகாக்க அவர்களின் திருமண வயதை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து திருமண வயதை மறு நிர்ணயம் செய்வதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 22-ந் தேதி, பாராளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடக்கிறது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர், இளைஞர் குரல் இயக்கத்தின் பிரதிநிதிகள்ஆகியோர் குழுவின் முன்பு ஆஜர் ஆகிறார்கள்.

அதோடு, தேசிய பெண்கள் ஆணையம், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.