மன்னாரில் சுமுகமாக நடை பெற்று வரும் தேர்தல் நடவடிக்கைகள்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17 வது பாராளுமன்றத் தேர்தல் நாடளாவிய ரீதியில். இன்றைய தினம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில், வன்னித் தேர்தல் தொகுதி மன்னார் மாவட்டத்திலும் தேர்தல் சுமுகமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிப்பிற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், 98 வாக்களிப்பு நிலையங்களிலும், இன்று காலை 7 மணிமுதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் காலை 7 மணியிலிருந்து, பகல் 1 மணி வரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் படி 43ஆயிரத்து 630 பேர் இதுவரை வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 48.15 வீதமாகக் காணப்படுகின்றது.
அத்துடன் வேட்பாளர்களும் தங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றமை குறிபிடத்தக்கது.