சென்னையில் வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்!

சென்னையில் வைரஸ் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. மேலும், காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ‘இன்புளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டை அலர்ஜி, உடல் வலி , தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.