இதுவரை கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையில், மன்னாரில், 55.5 வீதமானோர் வாக்களிப்பு.
(Video)
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது பாராளுமன்றத் தேர்தலில்,
மன்னார் மாவட்டத்தில், இரண்டு மணிவரை கிடைக்கப் பெற்றுள்ள முடிவுகளின் அடிப்படையில்,மொத்த வாக்காளர்களில்50 ஆயிரத்து 369 பேர் இதுவரை வாக்களித்துள்ளதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 55.5 வீதமாகக் காணப்படுவதாகவும் மன்னார் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் க. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவிலே 53 வீதமான வாக்குகளும், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலே,54 வீதமான வாக்குகளும், முசலி பிரதேச செயலாளர் பிரிவிலே,56 வீதமான வாக்குகளும், மடுப் பிரதேச செயலாளர் பிரிவிலே 60 வீதமான வாக்குகளும், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலே 60 வீதமான வாக்குகளும், பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் மக்கள் சிறப்பான முறையில் வாக்களித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (14.11) வியாழன்,2.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.