மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களிப்பு.

இன்றைய தினம்(14.11) வியாழன் நடைபெற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 17 வது, பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் நிறைவடைந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில் 74 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களில் இம்முறை 90 ஆயிரத்து 607 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்று இருந்த நிலையில், 67 ஆயிரத்து 433 பேர் வாக்களித்துள்ளனர்.
தற்போது வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இரவு 7.30 மணியளவில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது..