வீட்டு சின்னத்தில் வன்னிதேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரவிகரனை வரவேற்ற முல்லைத்தீவு மக்கள்!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு, வன்னிதேர்தல் தொகுதியில் வெற்றியீட்டிய, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள துரைராசா ரவிகரனை வரவேற்கும் நிகழ்வு இன்று (15) முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு துரைராசா ரவிகரன் வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில் , மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றிவாகை சூடிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனை முல்லைத்தீவு மக்கள் அனைவரும் அணிதிரண்டு வரவேற்ற்றனர்.
இன்று (15) காலை 10 மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் மக்களால் வெற்றியீட்டிய வேட்பாளருக்கு மாலை அணிவித்து, வரவேற்று குறித்த வெற்றிக் கொண்டாட்டம் ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.