பிலிப்பைன்ஸை அடுத்தடுத்து இரண்டு புயல்கள் தாக்கின.
இரண்டு சூறாவளி நெருங்கி வருவதாக பிலிப்பைன்ஸின் தேசிய வானிலை நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அந்நாட்டின் கடலோர நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற பேரிடர் நடவடிக்கை குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உசாகி எனப்படும் அதிவேக சூறாவளி நேற்று பிலிப்பைன்ஸை தாக்கியதாகவும், அது வலுவிழந்த போது மான் யி புயல் பிலிப்பைன்ஸை நோக்கி வீசுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
உசாகி சூறாவளி வடக்கு பிலிப்பைன்ஸை மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது, அது வலுவிழந்து கொண்டிருந்தபோது, மான் யி புயல் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் நிலத்தை நோக்கி நகர்கிறது என்று நாட்டின் வானிலை நிறுவனம் எச்சரித்தது.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தனது மக்களை வலியுறுத்தினார்.