பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய அனுரவுக்கு இந்தியாவிலிருந்து வாழ்த்துகள்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (நவம்பர் 15) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் வெற்றிக்காக இந்தியாவின் வாழ்த்தை தெரிவிக்கவே அவர் , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
ஒரு சகோதர ஜனநாயக நாடு என்ற வகையில் இந்தியா இந்த ஆணையை ஏற்றுக்கொள்வதாகவும், இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.