சிலிண்டர் பட்டியலிலிருந்து ரணிலை உள்ளே அனுப்பலாமா என ஆலோசனை?

இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனநாயக முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் உட்பட ஐந்து உறுப்பினர்கள் இந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

தினேஷ் குணவர்தன அவர்கள் அணித்தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த முன்னணியை பதிவு செய்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்படுவதா அல்லது இல்லையா என எதிர்காலத்தில் விவாதிக்க உள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.