10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், சபை முதல்வர் யார்?
10வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கவுள்ளார்.
அடுத்த பாராளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது.
நிலையியற் கட்டளைகளின்படி, சபாநாயகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு பாராளுமன்றம் ஆரம்ப நாளிலேயே நியமிக்கப்பட வேண்டும்.