வன்னி தேர்தல் மாவட்டத்தில் 15,254 வாக்குகள் நிராகரிப்பு.
வன்னியில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகள் 466 உட்பட 15 ஆயிரத்து 254 வாக்குள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னித் தோதல் தொகுதியில் 3 இலட்சத்து 6 ஆயிரத்து 81 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 140 பேர் வாக்களித்தனர். அதில் தபால் மூல வாக்களிப்பு 466 உட்பட 15 ஆயிரத்து 254 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 886 வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.