02 ஆசிரியைகளால் தாக்கப்பட்டு 3 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவி மரணம்! (Video)

வென்னப்புவிலுள்ள பாடசாலையொன்றில் இரு ஆசிரியைகளினால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, 3 மாதங்களின் பின்னர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்ததாக நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் மகள் படுகாயமடைந்து மூன்று மாதங்களாக மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வந்தார்.

ராகம வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இரு ஆசிரியைகளும் , மீண்டும் வென்னப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.