புதிய அரசின் அமைச்சரவை பதவியேற்பு நாளை… பிரதமர் ஹரிணி என்பது உறுதி!

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் நாளை (18) முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவியை வகிப்பார் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அமைச்சரவை இருபத்தைந்துக்கு மட்டுப்படுத்தப்படும் என்றும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டுக்கு அறிவித்திருந்தார்.

அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அமைச்சுப் பதவி விடயம் குறித்த அறிவிற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் நியாயமான முறையில் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.