மணப்பெண்ணுக்குக் கொரோனா வைரஸ்! கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தல்!
மணப்பெண்ணுக்குக் கொரோனா வைரஸ்! கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தல்!
வெயாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான மணப்பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில் பணிபுரியும் வெயாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த யுவதிக்குக் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, குறித்த பதிவுத் திருமணத்துக்குச் சென்ற கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவுத் திருமணத்துக்காக கடந்த 2 ஆம் திகதி வெயாங்கொடைக்குச் சென்றமை தெரியவந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பியகம நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அவர்களுக்குப் பதிவு திருமணத்தைச் செய்து வைத்த சபுகஸ்கந்த – கோனவல பகுதியிலுள்ள திருமணப் பதிவாளர் உட்பட திருமணச் சாட்சிக்குக் கையொப்பமிட்ட இருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி இளைஞரும், யுவதியும் கடந்த 2 ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர் எனவும், 9ஆம் திகதி குறித்த பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது எனவும் பியகம நிர்வாக பொதுச் சுகாதார ஆய்வாளர் மேலும் கூறினார்.