வவுனியாவில் கிணற்றில் வீழ்ந்து 8 வயது சிறுவன் பரிதாப மரணம்!

வவுனியா, கள்ளிக்குளம் பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து சாவடைந்துள்ளான்.
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி சிறுவன் கிணற்றுப் பகுதிக்குச் சென்று தண்ணீர் அள்ளியுள்ளான். இதன்போது தவறி உள்ளே வீழ்ந்துள்ளான்.
உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதிலும் அவன் உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த க.டிலக்சன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு சாவடைந்துள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.