மன்னார்-யாழ் பிரதான வீதி, பெரியமடு, கொமாண்டோ பயிற்சி முகாமில்500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்

.மன்னார்யாழ் பிரதான வீதி பெரியமடு கொமாண்டோ  ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் சிலருக்கு  சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையின்போது அவர்களுக்கு மூளைக் காய்ச்சல் இருந்தமை கண்டறியப்பட்டது.

இதை மன்னார் மாவட்டப்   பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி   அஸாத் எம் ஹனீபா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகளை. நிறுத்துமாறு  வைத்திய தரப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டமையால்,  அங்கு பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளதுடன் தொற்றினால் பாதிக்கபட்ட நால்வர் கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.