மனோவுக்குத் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்குமா சஜித் அணி?
“நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.