நட்சத்திர ஹோட்டலில் , ரஷ்ய சுற்றுலா பயணியான ரஷ்ய பெண்ணொருவரை பலாத்காரம் செய்தவர் கைது.

அஹுங்கல்ல ரியு ஹோட்டலில் ரஷ்ய பெண்ணொருவரை வன்புணர்வு செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 2024 நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலபிட்டிய பதில் நீதவான் சமந்த ஆப்ரூ இன்று (17) பிற்பகல் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான டிஎன்ஏ அறிக்கை மற்றும் கைரேகை அறிக்கையை வரவழைத்து, சந்தேக நபரை விசாரணை நாளில் அணிவகுப்புக்கு அனுப்புமாறு அஹுங்கல்ல பொலிசாருக்கு நீதவான் அறிவித்தார்.

மஹா ஊரகஹ பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த லியனகமகே ரவீந்திர புஷ்ப குமார (வயது 30) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல ரியு ஹோட்டலில் தங்கியிருந்த 41 வயதான ரஷ்ய பிரஜையான Angilina Krushki அஹுங்கல்ல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் ரஷ்ய பெண்ணை சம்பவம் நடந்த அன்றே பலப்பிட்டி அடிப்படை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தி வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்ளவும் அஹுங்கல்ல பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த ரஷ்யப் பெண் நவம்பர் 8ஆம் திகதி அஹுங்கல்லையில் உள்ள பிரபல ரியூ ஹோட்டலுக்கு வந்து தங்கியிருந்ததாகவும், கடந்த 12ஆம் திகதி அவரது பிறந்த தினத்தன்று இரவு அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த வங்கி ஊழியரான குறித்த பெண் கடந்த 12ஆம் திகதி இரவு ஹோட்டலின் ஒதுக்கப்பட்ட அறையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு உறங்கச் சென்றது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். அப்போது அறைக்கு வந்த நபர் ஒருவரால் ரஷ்ய பெண்ணை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் அஹுங்கல்ல ரியு ஹோட்டலின் ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யப் பெண் மது அருந்திக் கொண்டிருந்த போது குறித்த சம்பவம் அந்த பெண்ணின் அனுமதியுடன் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் பொலிஸாரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.