3 ஶ்ரீலங்கன் விமானங்கள் ஒரே நேரத்தில் பழுதடைந்தன.. பல விமானங்கள் தாமதம்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 03 ஸ்ரீலங்கன் விமானங்களில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக , பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டதாகவும் மேலும் பல விமானங்கள் தாமதமானதாகலாம் எனவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஒவ்வொரு விமானமும் அதன் பறப்பை முடித்த பின்னர் தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, மேலும் சில விமானங்களில் தேவையான தொழில்நுட்ப பராமரிப்பு மேற்கொள்ள சிறிது நேரம் எடுக்கும், அதன்படி, இந்த 03 விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்கான சோதனையால் தாமதம் ஏற்பட்டுள்ளது .
இந்தியாவின் சென்னைக்கு 17ம் திகதி மாலை 06.35 மணிக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் சென்னையில் இருந்து இரவு 10.15 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-124 ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், 17ஆம் திகதி இரவு 10.10 மணிக்கு இந்தியாவின் புதுடில்லியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-196 மற்றும் 17ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து இரவு 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. உள்ளது
இது குறித்து , இந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தெரிவிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த விமானங்களில் பயணிக்க இருந்தோரை மாற்று விமானங்கள் மூலம் இயக்கவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது
மேலும், இந்த விமானங்களின் தொழிநுட்பக் கோளாறு காரணமாக நாளை நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் இயக்கப்படவிருந்த மேலும் பல இலங்கை விமானங்கள் ரத்துச் செய்யப்படுவதும், தாமதமாகப் போவதாக உள்ள நிலையில் , அந்த விமானங்களின் கால அட்டவணை மாற்றங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.