மட்டக்களப்பில் திசைகாட்டியின் தோல்விக்கு சாணக்கியன் காரணமா?

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்கக்கூடிய ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாறியுள்ளது.
இலங்கையில் உள்ள 22 தொகுதிகளில் NPP தோல்வியடைந்த ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு ஆனது, மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,000 க்கும் அதிகமான வாக்குகளோடு 5ல் 3 ஆசனங்களை பெற்றது.
இளம் வயதுடைய,மற்றும் சுறுசுறுப்பான சாணக்கியன் ராசமாணிக்கம் 65,468 விருப்பு வாக்குகளைப் பெற்றார், இது மட்டக்களப்பு வரலாற்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் கிடைக்காத அளவு அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சாதனையாகும். இதற்கு முன் அதிகபட்சமாக 57,000 விருப்பு வாக்குகளே பெறப்பட்டு இருந்தது.
பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளர் 22,000 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதாவது 43,000 வாக்குகள் வித்தியாசம்.
யாழ்ப்பாணத்தில் NPP , 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியது. எவ்வாறாயினும், ஒட்டுமொத்தமாக. இலங்கைத் தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் இருந்து ஒரு ஆசனம் உட்பட மொத்தம் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியது.
மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் :-
இலங்கை தமிழரசுக் கட்சி – 96,975
தேசிய மக்கள் சக்தி – 55,498
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 40,139
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 31,286
ஐக்கிய மக்கள் சக்தி – 22,570
மட்டக்களப்பு மாவட்ட விருப்பத்தேர்வு முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி
1. சாணக்கியன் இராசமாணிக்கம் – 65,458
2. ஞானமுட்டி ஸ்ரீநேஷன் – 22,773
3. இளையதம்பி ஸ்ரீநாத் – 21,202
தேசிய மக்கள் சக்தி
1. கந்தசாமி பிரபு – 14,856
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் – 32,410