மலையக அரசியல் வரலாற்றில் முதல் தமிழ்ப் பெண் அமைச்சர் – மகளிர், சிறுவர் விவகாரம் சரோஜா வசம்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சராக சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மலையக அரசியல் வரலாற்றில் முதலாவது தமிழ்ப் பெண் அமைச்சர் என்ற பெருமையை இதன்மூலம் அவர் பெற்றார்.