சபாநாயகர் நிஹால் கலப்பத்தி.

அண்மைய அரசியல் செய்திகளின்படி, புதிய பாராளுமன்ற சபாநாயகராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் பிமல் ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டது, ஆனால் பின்னர் அது மாறியுள்ளதாக அறியமுடிகிறது.
இம்முறை தேர்தலில் நிஹால் கலப்பத்தி ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரத்தி, தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று விருப்பு வாக்குகளைப் பெற்று அம்பாந்தோட்டையில் இருந்து முன்னிலை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போதைய NPP அரசாங்க பாராளுமன்றத்தில் JVP உறுப்பினராக அதிக காலம் பிரதிநிதித்துவப்படுத்திய நபர் இவராகும்.