பணப் போக்குவரத்து நிறுவனத்தின் ஓட்டுநர் கோடிக்கணக்கான பணத்தோடு தப்பி ஓட்டம்

கடந்த 18ஆம் திகதி காலை மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை நகரில் பணத்தை பாதுகாப்பாக கொண்டுசெல்லும் தனியார் நிறுவனத்தில் சாரதியாக பணிபுரிபவர் ஒருவர் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தில் இருந்து பாதுகாவலர்கள் இறங்கிய போது சுமார் 07 1/2 கோடி பணத்தோடு , அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல்பொட பகுதியில் குறித்த வாகனம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபரின் நிறுவன அடையாள அட்டையின் புகைப்படம் இங்கே உள்ளதுடன், அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி எண்கள் –
01. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – கம்பஹா 071-8591608
02. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – கம்பஹா மாவட்டம் 071-8591610

Leave A Reply

Your email address will not be published.