மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் இருவர் பலி.
பலாங்கொடை பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக கடும் காற்று வீசிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.