யாழ். – சென்னை இடையேயான விமான சேவையை இடைநிறுத்தியுள்ளது அலியன்ஸ் எயார் நிறுவனம்.

யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும் சேவையில் ஈடுபட்டு வந்த இந்திய விமான சேவையான அலியன்ஸ் எயார் நிறுவனமே தனது சேவையை இந்த மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளது.
இதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணம் – சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றது.
காலையில் இடம்பெற்ற விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.