அமைச்சரவைப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்.

அமைச்சரவைப் பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது அமைச்சரவைப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வகித்த பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார்.