கம்பஹாவில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் சாவு!

கம்பஹா ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை இரவு ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பாடசாலை மாணவன் கம்பஹா, பஹலகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பஹா தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.