உயர்தரப் பரீட்சை எழுதுகின்ற மாணவனுக்கும் ‘கொரோனா’

உயர்தரப் பரீட்சை எழுதுகின்ற
மாணவனுக்கும் ‘கொரோனா’
கம்பஹா – திவுலப்பிட்டிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர் ஒருவருக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இரணவில வைத்தியசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த மாணவனுடன் நெருங்கிய தொடர்புகொண்ட 8 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனையைச் செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.