பிரபல தொழிலதிபர் கிருபாகரன் காலமானார்.

பிரபல தொழிலதிபரும் (கிருபா லேணர்ஸ் உரிமையாளர்) ஜக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவருமான அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்தார்.
மறைந்த கிருபாகரன் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.