உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடமையாற்றிய குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நீதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கியமைக்காகத் தமது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், தெரிவத்தாட்சி அலுவலருக்கு பக்கபலமாகவிருந்த விடயத்துக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜும் தேர்தல் செயற்பாடுகளில் சிறப்பாகக் கடமையாற்றியமைக்காக அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்தார்.