ஆசிய அபிவிருத்தி வங்கி , இலங்கைக்கு வழங்கும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி.

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இன்று (19) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.