மத்தும பண்டார , SJB தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு …
பொதுத் தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி வென்ற 05 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
மேலும் நான்கு பேருக்கு எம்.பி. சீட்கள் உள்ள போதிலும் , அவர்களை ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்கவில்லை.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தவிர ஏனைய கட்சிக் குழுக்களுக்கு நாடாளுமன்ற ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி , முன்னணியாக போட்டியிட்டதால் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.