பிள்ளையான் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ….

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காகவே சிவநேசதுரை சந்திரகாந்தனை காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான திகதியில் ஆஜராக அவர் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

அதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் இன்று (20) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா சனல் 4 ல் , ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு தொடர்பு இருப்பதாக அவர் அங்கு தெரிவித்தார்.

இதற்கிடையில், அசாத் மௌலானா ‘ஈஸ்டர் படுகோலை’ (ஈஸ்டர் படுகொலை) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.