ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐஐடி விருது.

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதற்காக தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது (படம்) வழங்கியுள்ளது.

ஆண்டுதோறும் மெய்நிகர் தொழில்நுட்பம், அதனுடன் தொடர்புடைய துறைகளில் சாதித்தவர்களுக்குச் சென்னை ஐஐடி விருது வழங்குகிறது.

இந்த ஆண்டுக்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு வெளியான ‘லீ மஸ்க்’ என்ற படத்தில் மெய்நிகர் தொழில்நுட்பத்தை ரகுமான் பயன்படுத்தியிருந்தார்.

விருது நிகழ்வில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்காக, தனது சொந்த ஊரில் விருது பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், இன்டெல் தொழில்நுட்பங்கள் போல் ஏன் இந்தியாவில் இருந்து புதிய தொழில்நுட்பங்கள் அதிகம் உருவாவது இல்லை என யோசித்தது உண்டு. இந்த நிறுவனங்களில் இந்தியர்கள்தான் அதிகம் பணியாற்றுகிறார்கள். அடுத்த மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்கள் ஏன் இந்தியாவில் இருந்து உருவாகக்கூடாது?

“இவையெல்லாம் நடப்பதற்கு இந்திய அரசு உதவ வேண்டும். பெரிய, புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும்,” என்றார் ரகுமான்.

Leave A Reply

Your email address will not be published.