நாட்டுக்குத் தேவையான அமைச்சுக்கள் உருவாக்கப்படும்.. பிரதி அமைச்சர்கள் தொகை 25ஐத் தாண்டும் …

நாட்டுக்கு தேவையான அமைச்சுக்களை உருவாக்கி பிரதியமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் வீழ்ந்த நிறுவனங்களை மீளப்பெறக்கூடிய நபர்களை வேலைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 25ஐத் தாண்டும் என்றும், கிடைத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குக் கிடைத்த அதிகாரத்தை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துவேன் எனவும், இவ்வாறான வரம்பற்ற அதிகாரத்தை தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும், மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் சிதைக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.