இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள பகைமைக்கு கட்சியை பலி கொடுக்க முடியாது.
புதிய ஜனநாயக முன்னணியினால் தேசிய பட்டியலில் இருந்து தம்மை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை முறையான மற்றும் சட்டபூர்வமான முறையில் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) காலை 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பங்கேற்க வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது நியமனத்தின் மூலம் சுமார் 2% பேர்தான் சிக்கலை உருவாக்கியுள்ளனர் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி என்ற மாபெரும் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தனது நம்பிக்கை எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சியை மீட்டெடுத்து அங்கு கொண்டு செல்ல விரும்புகிறேன், இருவரின் கோபத்திற்கு முழுக் கட்சியும் பலியாவதை அனுமதிக்க முடியாது” என்றார் அவர்.