சச்சரவோடு ஆரம்பித்த அர்ஜுனாவின் புதிய பாராளுமன்ற பிரவேசம்…(வீடியோ/தமிழாக்கம்)
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பாரம்பரியமாக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய ராமநாதன் அர்ஜுனா அமர்ந்ததால், அவருக்கும் நாடாளுமன்ற அதிகாரி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நேற்று 10ஆம் திகதி ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்ட ஆசனங்கள் எதுவும் இருக்காது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பியவாறு அமரலாம் எனவும் நாடாளுமன்றமே அறிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்படி, யாழ்.மாவட்டத்தின் சுயேச்சையாக போட்டியிட்டு பாராளுமன்றத்தை , பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு உறுப்பினரான வைத்தியர் இராமநாதன் அர்ஜுனா, எதிர்க்கட்சித் தலைவருக்கென ஒதுக்கப்பட்ட பாரம்பரிய ஆசனத்தில் அமர்ந்தார்.
அப்போது அங்கு வந்த நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் , இந்த ஆசனம் எதிர்க்கட்சித் தலைவருக்கே ஒதுக்கப்பட்டது என சொன்னதை ஏற்க மறுத்து அங்கேயே அமர்ந்த விடயம் சிலருக்கு மகிழ்வையும் , பலருக்கு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது உரையாடல் இதோ:
நாடாளுமன்ற அதிகாரி – இது எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமநாதன் அர்ஜுனா – இது எங்கும் எழுதப்படவில்லை.
பாராளுமன்ற அதிகாரி – இல்லை… அது சரி. அதாவது இது எதிர்க்கட்சித் தலைவரது இருக்கை…
டாக்டர் அர்ஜுனா – நான்கைந்து முறை சொல்ல முடியாது. அப்படி எங்காவது எழுதப்பட்டுள்ளதா?
நாடாளுமன்ற அதிகாரி – இல்லை… இன்று அப்படி பெயர் இடப்படவில்லை.
டாக்டர் அர்ஜுனா – ஓகே… அப்படியானால் எங்கயும் உட்காரலாம்தானே?
நாடாளுமன்ற அதிகாரி – இல்லை… இது எதிர்க்கட்சித் தலைவர் இருக்கை.
டாக்டர் அர்ஜுனா – இந்த இருக்கையில் அப்படி எங்காவது எழுதியிருக்கிறதா? எழுதி இருந்தால் காட்டுங்கள்… நான் எழுந்து செல்வேன். அப்படி இங்கு செய்ய முடியாது. வெரி சொறி.
இன்னும் எத்தனை நாற்காலிகள் உள்ளன? அங்கு உட்காரச் சொல்லுங்கள். இன்னும் எத்தனை நாற்காலிகள் உள்ளன? அங்கு உட்காரலாம்.
நாடாளுமன்ற அதிகாரி – இது பாரம்பரியமானது
டாக்டர் அர்ஜுனா – பாரம்பரியத்தை மாற்றிவிட்டோம். அதனால் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கான காரணத்தை சொல்லுங்க.
நாடாளுமன்ற அதிகாரி – ஆளும் கட்சியில் இருப்பவர்களுக்கு பின்னால் ஒதுக்கியுள்ளோம்.
டாக்டர் அர்ஜுனா – நான் ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நான் சுயேச்சையாக போட்டியிட்டு வந்தேன். இங்கு அரசியல் செய்து வரவில்லை.
நாடாளுமன்ற அதிகாரி – சேர் எங்களை புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். இப்படி பேசுவது தவறு.
டாக்டர் அர்ஜுனா – தவறில்லை, இது பாராளுமன்றம்தானே? இது தவறில்லை , ஹாஹா