ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 06 பொலிஸ் குழுக்கள் களத்தில் …
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் அவரைக் கைது செய்வதற்கு இதுவரை முடியவில்லை.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்றையதினம் (13) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் பதியுதீனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டது.
நீதிமன்றம் அதனை நிராகரித்ததுடன் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவரை கைது செய்ய பிடியாணை தேவையில்லை என நீதவான் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பதியுதீனை கைது செய்வதற்கு 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.