“இப்போது புதிய அரசாங்கம்… எமது முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறு சொல்லியுள்ளோம்..’ வெளிவிவகார அமைச்சர் விஜிதாவிடம் , ஜூலி!
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இன்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து, இந்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றி என்றும், அரசாங்கம் செய்யும் அனைத்திற்கும் அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
இன்று 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட இலங்கையின் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தின் இறுதியில் பாராளுமன்றத்தினால் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட தேநீர் விருந்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த பின்னர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இன்று பேசினேன். எங்கள் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரச் சொன்னேன்.. வந்து முதலீடு செய்யுங்கள் என்றேன்.. இப்போது புதிய அரசு வந்துள்ளது என சொல்லியுள்ளேன் என்றார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்.