மீண்டும் பிள்ளையான் குற்றப் புலனாய்வு துறையில் விசாரணை .
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வந்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே. நேற்றும் அவர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து கிட்டத்தட்ட 05 மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.