தேசிய மக்கள் சக்தியின் அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்து வைப்பு.
தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத் தலைமை அலுவலகம் வவுனியாவில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா கித்துள் வீதியில் குறித்த அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்ட கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் குறித்த அலுவலகம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சத்தியபிரமாணம் செய்துகொண்ட அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.