யாழ் ஆவா கும்பலின் பின்னால் இருப்பது இராணுவம்.. குற்றங்களை செய்துவிட்டு இராணுவ முகாம்களுக்குள் ஓடுகிறார்கள்..- பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (Videos)
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குறிப்பிடுகின்றார்.
ஆவா குழு சில வன்முறைச் செயலைச் செய்த பின்னர் அங்கிருந்து தப்பித்து இராணுவ முகாமுக்குள் ஓடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத் தகவல் நாளிதழ்கள் உட்பட பல ஊடகங்களில் வெளியானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அவர் அநுரவின் அரசுக்கு ஆதரவளிக்க போவதாகவும் , எதிர்கட்சி தலைவரது ஆசன பிரச்சனை மற்றும் தொலைபேசியில் வீடியோ நேரலை செய்ய வேண்டாம் என எந்த சட்டமாவது உள்ளதா என வினா எழுப்பும் தொலைக் காட்சி நேர்காணல்களும் , பேட்டிகளும் , தமிழ் மக்களை தாண்டி , தென்பகுதி சிங்கள மக்களிடையே வைரலாகி வருகிறது.
மேடையை விட்டு இறக்கிவிட்ட சஜித்தினிடம் பழி வாங்கினாரா அச்சுனா?
மச்சான் அச்சுன
நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா?
எனக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?