அரச தடைகள் இல்லை… எதிர்ப்புகள் இல்லை… வடக்கில் மாவீரர் வாரம் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் மாவீரர் வாரம் ஆரம்பமாகி 21ஆம் திகதி மாலை அப்பகுதிகளில் அமைந்துள்ள சமாதிகளில் மலர்கள் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி தீபமேற்றப்பட்டது.

பிரதான மாவீரர் வைபவம் யாழ்ப்பாணம் தீவக மயானத்தில் இடம்பெற்றதுடன், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கிளிநொச்சி மாகாணங்களில் உள்ள பல இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களது உறவினர்கள் , போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து இம்மாதம் 27ஆம் திகதி வரை தினமும் இந்த நிகழ்வுகளை நடத்துகின்றனர்.

நவம்பர் 27ஆம் திகதி மாலை 6-05 மணிக்கு இந்த மாவீரர் நாள் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாகவும் அமையவுள்ளது.

அன்றைய தினம், இறந்தவர்களின் உறவினர்கள் ஒவ்வொரு கல்லறையின் முன்பும் வந்து மலர்மாலைகள் மற்றும் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்துவதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு தென்னை மரத்தை விநியோகிப்பார்கள்.

இவ்வருடம் வடக்கில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு எதையும் செய்யவில்லை என்பது விசேட அம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.