நேற்று முதல் அஸ்வசும பயனாளி குடும்பங்களுக்கு 3000 ரூபாய் போனஸ்

70 வயதுக்கு மேற்பட்ட அஸ்வசும பயனாளி குடும்பங்களில் வாழும் முதியோர்களுக்கான கொடுப்பனவை அந்த குடும்பங்களுக்கு சொந்தமான அஸ்வசும வங்கிக் கணக்கில் இம்மாதம் முதல் வரவு வைக்க நலன்புரி நன்மைகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி நேற்று முதல் முதியோர் உதவித்தொகையான 3000 ரூபாய் அந்த கணக்குகளின் வழி சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும்.

உதவித்தொகையின் பயனாளிகள் அல்லாத 70 வயதுக்கு மேற்பட்ட பிற பெரியவர்கள் தற்போதுள்ள முறைப்படி தபால் அலுவலகங்கள் மூலம் உதவித்தொகையை தொடர்ந்து பெறலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வசும திட்டத்தின் கீழ், 11,086 லட்சம் வயது முதிர்ந்தவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.