JVP CEV Professional Union கேட்கும் கிறிஸ்துமஸ் போனஸ் : ஒரு நபருக்கு 75,000 முதல் 9 லட்சம் வரை.
நத்தார் பண்டிகைக்கு முன்னதாக மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குமாறு ஜனதா விமுக்தி பெரமுனவின் தொழிற்சங்க இயக்கமான இலங்கை மின்சார ஊழியர் சங்கம் ,மின்சார சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக முன்னாள் நிர்வாகம் போனஸ் வழங்காததால், எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் அதாவது டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
சில ஊழியர்களுக்கு 75,000 முதல் 2 இலட்சம் ரூபா வரை போனஸும், பொறியியலாளர் ஒருவருக்கு 2 1/2 இலட்சம் ரூபாவும், பொது முகாமையாளருக்கு 09 இலட்சம் ரூபாவும் போனஸாகக் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“இலங்கை மின்சார சபை இனி நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக இல்லை. தற்போது லாபகரமான நிறுவனமாக உள்ளது. எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கலாம். இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் நிறுத்தப்பட்ட போனஸை புதிய அரசாங்கத்தின் கீழ் வழங்குமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.