சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 9 பேர் சிக்கினர்.

மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்துக்குப் பிரதானமாக நீர் வழங்கும் பொகவந்தலாவ மாவெளி வனப்பகுதியில் பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 9 சந்தேகநபர்களை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு பெரும் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தினர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு பொகவந்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்க ள் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இவ்வாறான சுற்றிவளைப்புகள் தொடரும் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.