வடக்கு மாகாண அமைச்சின் செயலர் ஒருவர் இடைநிறுத்தம் – ஆளுநர் அதிரடி நடவடிக்கை.

வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர் ஒருவரின் பதவியை ஆளுநர் நா.வேதநாயகன் மீளப்பெற்றுள்ளார்.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநரால் மீளப்பெறப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.